செய்தியாளரை தாக்கிய "திமுக மாவட்ட செயலாளர்" கைது.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயன்ற 3 பேர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு முகமையால் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய திமுக அயலக அணி அமைப்பாளர் ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கடத்தலுக்கு உதவியதாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசுவின் அலுவலக கட்டிடத்திற்கு கீழ் உள்ள “சகாரா எக்ஸ்பிரஸ்” என்ற கொரியர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்யப் போவதாக தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பெயரில் அதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் செந்தில் என்பவர் சென்னை மேற்கு திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு மற்றும் அவருடைய ஆதரவாளர்களால்அறையில் கட்டி வைத்து , கொடூரமான முறையில் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செய்தி சேகரிக்குச் சென்று செய்தியாளர் மீது திமுக மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட செய்தியாளர் அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசன் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai West DMK district secretary arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->