அமைச்சர் பொன்முடி மீதான அபகரிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை முதலமைச்சர் மு.கருணாநிதியின் திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி இடத்தை அபகரிக்க தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் தனது மாமியார் சரஸ்வதி பெயரில் அந்த இடத்தை பதிவு செய்து ரூ.35 லட்சம் மதிப்பில் அந்த இடத்தில் கட்டிடம் கட்டியதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் சென்றது.

இது தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அமைச்சர் பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார்பதிவாளர் புருபாபு, திமுக எம்எல்ஏ கிட்டு என்ற சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை முடித்து 2004ம் ஆண்டு பொன்முடி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி அமைச்சர் பொன்முடி அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை வழக்கில் இருந்து 2007ம் ஆண்டு விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிவில் பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை அடுத்து பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்தது

இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே அமைச்சர் பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார்பதிவாளர் புருபாபு, சைதை கிட்டு ஆகியோர் இறந்துவிட்டனர். இதனால் பொன்முடி உள்ளிட்ட மற்ற 7 பேர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜரத்தினம் உள்பட 90-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 180-க்கும் மேற்பட்ட ஆவணங்களை சாட்சியாக லஞ்ச ஒழிப்புத்துறையால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் வேலூர் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுவித்த நிலையில் இந்த முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் பொன்முடியின் வழக்கில் இன்று தீர்ப்பு வழியாக இருப்பது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக திமுக கவனித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC Verdict today in Minister Ponmudi land grabbing case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->