கலவர வழக்கு! காங்கிரஸ் எம்எல்ஏ கைது!
Chhattisgarh congress MLA Devendra arrested
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர யாதவ் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தின் கிரௌத்புரி தாம் பகுதியில், பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களின் புனித சின்னமாக கருதப்படும் வெற்றி தூணை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சமூகத்தினர் கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் ஒரு அரசு அலுவலகம், 150 க்கும் மேற்பட்ட வாகனம் மீது ஒரு கும்பல் தீ வைத்து கொளுத்தியது.
இந்த கலவரத்திற்கு பின்னால் காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர யாதவ் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த கலவரம் நடந்த போது தேவேந்திர யாதவ், காங்கிரஸ் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த காங்கிரஸ் தலைவர்களின் பொதுக்கூட்டத்தில் தேவேந்திர யாதவ் கலந்து கொள்ளவில்லை என்று வெளியான காணொளி மூலம் தெரிய வந்தது .
இதனை அடுத்து தேவேந்திர யாதவ்வின் மீது பகைமையை ஊக்குவித்தல், குற்றவியல் சதி, கலவரத்திற்கான தண்டனை, அரசு அரசு ஊழியரின் கடமையை செய்யாமல் தடையாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், தேவேந்திர யாதவை கைது செய்த போலீசார், கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு வருகின்ற 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது.
முன்னதாக தேவேந்திர யாதவை கைது செய்ய விடாமல், அவரின் ஆதரவாளர்கள் சுமார் பத்து மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வழியாக போலீசார் அவரை கைது செய்த போது , நான் அரசுக்கு பயப்படவில்லை. மக்களுக்காக எனது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.
English Summary
Chhattisgarh congress MLA Devendra arrested