சிதம்பரம் நடராஜர் கோயில் 2000 ஏக்கர் நிலம் விற்பனை! அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு!
Chidambaram Temple land case Madras HC
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட வழக்கில், கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விற்பனை செய்யப்பட்டவை தீட்சிதர்களால் சொந்தமாக சம்பாதித்த சொத்துக்கள் என, பொதுதீட்சிதர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
மேலும், 2000 ஏக்கர் நிலம் விற்பனை செய்ததாக கூறிய அறநிலையத்துறை வெறும் இருவது ஏக்கர் ஆவணத்தை மட்டுமே தந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்க்கு அறநலத்துறை தரப்பில், ஆதாரங்களை தர தயாராக உள்ளதாக காலா அவகாசம் கேட்டது. மேலும், நிலத்தின் சுவாதீன உரிமை பெற்றவர் எழுதிய உயிலின் அடிப்படையில், குறிப்பிட்ட தீட்சிதர் நிலத்தை விற்பனை செய்துள்ளார். நிலத்தின் பட்டா இன்னும் கோயிலின் பெயரிலேயே உள்ளது என்று அறநிலையத்துறை தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய அறநிலைத்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகின்ற 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
Chidambaram Temple land case Madras HC