#சற்றுமுன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்.. இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு மற்றும்  முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, புதிய தொழில்களுக்கு அனுமதி அளிப்பது, மேகதாது அணை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய புதிய சட்டம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகள் குறித்தும், அமைச்சரவையில் விவாதிக்கப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது. முக்கிய கொள்கை முடிவுகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுமென அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister MK Stalin chaired Tamil Nadu Cabinet meeting today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->