தெறிக்க விட்டார்!!! தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம் தாக்கல் செய்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்....!!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதை முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அனைவர் முன்னிலையிலும் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின்:

அப்போது அவர் கூறியதாவது,"நம் இந்தியநாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள மக்கள் வாழும் நம் இந்திய நாட்டில், இம்மக்களுக்கென்று அதைப் பாதுகாக்கின்ற அரசியல் சட்ட உரிமைகளும் உள்ளன.

இத்தனைவேறுபாடுகளையும் கடந்து நாம் அனைவரும் ஒற்றுமையாகவாழ்கிறோம்.நம்நாட்டு மக்களின் நலன்களைப் போற்றிப் பாதுகாக்கின்ற வகையில்,அதற்கான அரசியல்அமைப்பையும், நிர்வாக அமைப்பையும் அண்ணல் அம்பேத்கார் அவர்கள் தலைமையில் உருவாக்கியவர்கள்,ஒற்றைத் தன்மைக் கொண்ட நாடாக இல்லாமல், கூட்டாட்சித் தத்துவத்தினை நெறிமுறைகளைக் கொண்டமாநிலங்களின் ஒன்றியமாக உருவாக்கினார்கள் என்பதை அவை உறுப்பினர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு மத்திய அரசிடம் போராடி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளோம். ஆனால், இன்றைய கால கட்டத்தில் மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு,மாநில மக்களின் அடிப்படை உரிமைகளுக்கே, ஒன்றிய அரசிடம் போராடிப்பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம்.

என்பதை வேதனையோடு இங்கே பதிவு செய்கிறேன்.பரந்து விரிந்த இந்த இந்திய நாட்டை மொழிவாரி மாகாணங்கள் என்ற மொழிவாரி உரிமை தான் ஒற்றுமையாகக் காத்து வருகிறது.இப்படி அமைக்கப்பட்ட மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக விளங்கினால் தான்.மாநிலங்கள் வளர்ச்சி அடையும்.இந்தியாவும் வலிமை பெறும்.

இதனை உணர்ந்து மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்கின்ற பரந்துபட்டகொள்கை முழக்கத்தினை தமிழ்நாடு உகரக்க முழங்கி வருகிறது.இந்தியாவிலேயே எந்த மாநிலமும் இதுகுறித்து முயற்சிகள் எடுக்காத நிலையில், ஏறத்தாழ அரை நூற்றாண்டுகாலத்திற்கு முன்பே, 1969-ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கருணாநிதி சிந்தித்தார்.

நாட்டிலேயே முதன் முறையாக ஒன்றிய-மாநில அரசின் உறவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து 1971-ஆம் ஆண்டு இராஜமன்னார் குழு தனது அறிக்கையை வழங்கியது. ராஜமன்னார்குழு அளித்த முக்கிய பரிந்துரைகளை தமிழ்நாடுசட்டமன்றத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றியவர் கருணாநிதி.

சமூக நீதி, பொருளாதார ஏற்றத் தாழ்வின்மை, ஒடுக்கப்பட்டோருக்கான வாய்ப்பு ஆகியவற்றை கருத்திற்கொண்டு, மாநில அரசின் கல்விக் கொள்கையின் அடிப்படையில், மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டு மாணாக்கர்கள் பங்கேற்பதை உறுதி செய்யும் வண்ணம் இருந்து வந்த மாநில அடிப்படையிலான கொள்கையினை நீர்த்துப் போகச் செய்து- முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் 'நீட்' எனும் ஒற்றைத் தேர்வின் வாயிலாக மட்டுமே மருத்துவக் கல்வி இடங்களை நிரப்பும் முறைக்கு மாற்றப்பட்டுவிட்டது.

இந்த 'நீட்' தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாகவும், பயிற்று மையங்களை ஊக்குவிக்கும் வண்ணமும், கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் போட்டியிட முடியாத மாணவர்களுக்குப் பின்னடைவு ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. இந்த 'நீட்'தேர்வால் ஏற்பட்டுள்ள இன்னல்களைக் களையும் விதமாக, இந்த சட்டமன்றப் பேரவையால் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசிற்கு அனுப்பப்பட்டும் தீர்வு எட்டப்படாமல் கிடப்பில் உள்ளது.

இதே போல் மாநிலப் பட்டியலில் இருந்த பள்ளிக் கல்விபொதுப் பட்டியலுக்கு ஒன்றிய அரசால் மாற்றம்செய்யப்பட்டதால், தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் மூலம் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்க ஒன்றிய அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி மொழியை மறைமுகமாக தமிழ்நாட்டு மாணாக்கர்களின் மீது திணிக்க முற்படுகிறது.கல்விக்கொள்கையில் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலநலனை மட்டுமே முதன்மையாக கருதும் திராவிட மாடல்அரசு, தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், 'சமக்ரசிக்க்ஷா அபியான்' திட்டத்தின் மூலம் தமிழக அரசிற்கு விடுவிக்க வேண்டிய சுமார் ரூ.2,500 கோடியைவிடுவிக்காமல் தமிழக மாணவர்களின் நலனை வஞ்சித்துவருகிறது.

மொழி-இன-பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைகளை உறுதி செய்யும் வண்ணம் பள்ளிக் கல்வியைமீண்டும் மாநிலப் பட்டியலுக்கே சேர்க்கப்பட வேண்டியதுஇன்றியமையாததாகும் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும்,ஒன்றிய-மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளைமேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி .மே.ஜோசப் அவர்களைத் தலைவராகக் கொண்டகுழுஅமைக்கப்படுகிறது"எனத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister MK Stalin tabled resolution state autonomy Tamil Nadu Assembly


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->