பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறிய சீன வெளியுறவுத் துறை ! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று ஜூன் 4ம் தேதி நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றது. 

ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 240 இடங்களிலும், காங்கிரஸ் 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எனினும் இரு கட்சிகளுக்கும் ஆட்சி அமைக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சியமைக்க மும்முரம் காட்டி வந்தன.

இந்நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் உள்ளதால், பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்கப் போகிறார் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர், "இந்திய பிரதமர் மோடியின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்து கொள்கிறோம். இரு நாட்டு மக்களின் நலனுக்காக சீனா இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. இரு தரப்பு நட்புறவை மேலும் முன்னேற்ற தயாராக உள்ளோம்" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Department of Foreign Affairs Wishes PM Modi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->