ஜோத்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 97 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடி ஏற்றுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது, ஒருவரை ஒருவர் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தி கொண்டனர்.

தாக்குதல் இடத்துக்கு சென்ற காவலர்கள் மீதும் கற்கள் பட்டதால் அவர்களும் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது.

மோதல் நடைபெற்ற பகுதியில் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக ஜோத்பூர் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே வதந்திகள் பரவுவதை தடுப்பதற்காக ஜோத்பூரில் இணையதள சேவை முடக்கப்பட்டு, ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

இந்த வன்முறை சம்பவத்தில் 97 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் தெரிவிக்கையில்,  'இந்த வன்முறை கலவரத்திற்கு உள்ளூர் நிர்வாகத்தின் அலட்சியம்தான் காரணம் என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

clash two communities in Jodhpur ISSUE


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->