“தமிழ், தமிழர் என்பதே நம்மை ஒன்றிணைக்கும்” - CM ஸ்டாலின்!
CM MK Stalin nSCST People
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1,000 பழங்குடியினர் வீடுகளை திறந்து வைத்ததோடு, 49,542 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக அரசால் அறிவிக்கப்பட்டமைக்கு காரணம், சாதிய வேறுபாடுகள் நீங்க வேண்டும் என்பதே என்றும் வலியுறுத்தினார்.
திராவிட இயக்கம், பெரியார் மற்றும் அம்பேத்கரின் சிந்தனைகளை வழிகாட்டியாக கொண்டு செயல்படுகிறது என்றும், எம்.சி.ராஜா மாணவர் விடுதி முன்புறம் அவரது சிலை விரைவில் நிறுவப்படும் என்றும் அறிவித்தார். மாணவர்களுக்கான கல்வி, விடுதி வசதிகள், மற்றும் பெண்கள் நலத்திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.
அத்துடன், 'நன்னிலம்' திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மகளிருக்கு நிலம் வழங்கப்பட்டு வருவது, சமூக நீதியின் முக்கியப் படியாக விளங்குவதாகத் தெரிவித்தார். அம்பேத்கரின் தொழில் முன்னோடிகள் திட்டம், 'தொல் குடி' திட்டம் உள்ளிட்ட முயற்சிகள் சமூகத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளன என்றார்.
சமத்துவம், மனிதநேயம், கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவை ஒடுக்கப்பட்ட மக்களிடம் சென்றுள்ள நிலையில், சாதிய வேறுபாடுகளை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், “தமிழ், தமிழர் என்பதே நம்மை ஒன்றிணைக்கும்” என்று உரையை முடித்தார்.
English Summary
CM MK Stalin nSCST People