கடுமையான விமர்சனம்: கேரம் உலக சாம்பியன் காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக ரூ.1 கோடி பரிசு!
CM MKStalin Khazima Carrom TNGovt
சென்னை: கேரம் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக ரூ.1 கோடி பரிசு வழங்க தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
வீராங்கனைகள் மித்ரா, நாகஜோதி ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு சார்பாக ரூ.50 லட்சம் பரிசு வழங்க தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், உலக சாம்பியன் காசிமா மற்றும் வீராங்கனைகள் மித்ரா, நாகஜோதி ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு சார்பாக அறிவிக்கப்பட்ட பரிசு தொகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வழங்கியுள்ளார்.
முன்னதாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷிற்கு மட்டும் 5 கோடி பரிசு அறிவிக்கும் தமிழக அரசு, கேரம் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு ஒரு ரூபாய் கூட அறிவிக்க வில்லையே என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது கேரம் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக ரூ.1 கோடி பரிசு வழங்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
CM MKStalin Khazima Carrom TNGovt