சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும் - விசிக தலைவர் திருமாவளவன்..!  - Seithipunal
Seithipunal


நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசியுள்ளார். இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற இரு அவைகளும் வழக்கம்போல் கூடியபோது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 

மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கரை பற்றிய சர்ச்சைப் பேச்சுக்கு உடனடியாக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அமித்ஸாவின் இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது:-

"புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்? எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை மத்திய அமைச்சர் அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.

அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களுடைய உண்மையான எதிரிகள். இதனை விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள். புரட்சியாளர் அம்பேத்கர் விஸ்வரூபம் எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck leader thirumavalavan tweet about amitsha


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->