முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்.. வெளியாக போகும் அறிவிப்பு.!!
cm stalin and thirumavalavan alliance meeting
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 10 மணி முதல் தொடங்கியது. ஆகையால், அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விசிகவுக்கான இடப்பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இன்று மாலை கூட்டணி காட்சிகளுக்கான இடப்பங்கீடு முடிந்து, வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
English Summary
cm stalin and thirumavalavan alliance meeting