திமுக கூட்டணியில் திடீர் குழப்பம்... ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க மு.க ஸ்டாலின் முடிவு...!! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் நடவடிக்கையால் குடியரசு தின விழா தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. 

இதற்கு காரணம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதும், தமிழகத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாகும் குற்றம் சாட்டி தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் முடிவு எடுப்பார் என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து  நேற்று மாலை முதல்வர் மு.க ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஆளுநர் ஆர்.என் ரவி தேநீர் விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். 

இந்த அழைப்பின் பொழுது ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்து கலந்து கொள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இன்று நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்து முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் பெரும்பாலானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணித்த நிலையில் திமுகவின் தலைவர் மு.க ஸ்டாலின் தேநீர் விருந்து சம்மதம் தெரிவித்திருப்பது திமுக கூட்டணியில் பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. ஆளுநர் விவகாரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin decision to attend Governor tea party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->