நேற்று எஸ்கே! இன்று எம்கேஎஸ்! ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ஒரு மாத சம்பளத்தை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


ஃபெஞ்சல் புயல், கனமழை வெள்ளத்தால் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து உள்ளது. 

சுமார்  ஒன்றரை கோடி பேர் மக்கள் புயல், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 2 லட்சத்து 11 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்கட்ட நிவாரண நிதியையும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், புயல் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

முன்னதாக நேற்று முதல் ஆளாக திரையுலகிலிருந்து ஃபெஞ்சல் புயல், கனமழை பாதிப்புகளுக்கான நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Fengal Cyclone relief fund


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->