#BREAKING || கச்சத்தீவு விவகாரம் - மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.!
CM STALIN LETTER FOR Kachchatheevu
இந்திய நாட்டிற்கும் இலங்கை நாட்டிற்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவானது, ராமேஸ்வரம் தீவில் இருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்த கச்சத்தீவு முதலில் இந்தியாவிற்கு சொந்தமாக இருந்த நிலையில், பின்னர் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிக்காலத்தில் இந்த கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.
இந்த கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட பின்னர், தொடர்ந்து இந்திய நாட்டின் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை படையினரால் தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும், படகுகள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், இந்த கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்தியா - இலங்கை நாட்டை சேர்ந்த மக்கள் திரளாக வந்து ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் விழா நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்திய மக்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கச்சத் தீவில் அமைந்துள்ள அந்தோணியார் கோவில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கச்சத்தீவு திருவிழாவில் தமிழக மீனவர்களை அனுமதிக்க கோரி, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் எழுதிய அந்தக் கடிதத்தை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இடம் நேரடியாக வழங்கியுள்ளார்.
English Summary
CM STALIN LETTER FOR Kachchatheevu