இந்தியப் பிரதமர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு முழுஒத்துழைப்பு - முதல்வர் ஸ்டாலின் எழுதிய பரபரப்பு கடிதம்.! - Seithipunal
Seithipunal


உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் நலன் காக்க நடவடிக்கை வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் அந்த கடிதத்தில் ”உக்ரைனில் மருத்து பயின்ற 2,000க்கும் அதிகமான மாணவர்கள் தமிழகம் திரும்பியுள்ளார்கள்.இந்தியாவிலே தமிழகத்தில்தான் இந்த எண்ணிக்கை அதிகம். 

நாடு திரும்பிய மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் உக்ரைன் சென்று தங்கள் மருத்துவ படிப்பை தொடர முடியாத சூழலில் உள்ளனர்.

இந்த நிலையில், உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் நிலை குறித்து மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. 

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.மாணவர்கள் கல்வி தொடர்பாக ஏற்கனவே தாமதம் ஆகிவிட்டது. மாணவர்கள் இந்தியாவிலோ அல்லது வெளி நாட்டிலோ மருத்துவம் தொடர வழிவகை செய்ய வேண்டும். 

இது தொடர்பாக இந்தியப் பிரதமர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று உறுதியளிக்கிறேன்" என்று அந்த கடிதத்தில் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm stalin letter to pmmodi for ukraine indian student july 2022


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->