சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு! ஆலோசனையில் இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


தொடர் அரசியல் படுகொலைகள், பெட்ரோல் குண்டு வீச்சு, டிஐஜி தற்கொலை, லஞ்சம் வாங்கும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து போயிருப்பதாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். 

"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது" என்று கடுமையான விமர்சனத்தை தமிழக போலீசார் மீதும், அத்துறையின் அமைச்சரும், முதலமைச்சருமான முக ஸ்டாலினை நேரடியாக தாக்கி எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

மேலும், கடந்த 50 நாட்களில் பாமக நிர்வாகிகள் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை என்று, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி இருந்தார். மேலும் இன்று பாமக சார்பாக போராட்டமும் நடக்கிறது.

இந்த நிலையில், தமிழகம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு நிலை குறித்து, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மற்றும் தற்போதைய சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை எப்படி கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் விரிவான ஒரு ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin meet for TN Law and Order issue PMK Protest ADMK Statement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->