வேறுவழியில்லை., வரி உயர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்று - முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று சட்டசபை கூட்டம் நடைபெற்றது. சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களும் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விகளுக்கு துறைசார் அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

மேலும், சட்டசபையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விவகாரங்கள் குறித்து தெரிவிக்கையில், "சொத்து வரி வேண்டும் என்றே உயர்த்தபடவில்லை. புதிதாக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளை சரி செய்வதற்கு வரி உயர்வு அவசியமாகிறது. 

ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதா வகையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். எனவே, பொது மக்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும்.

தமிழகத்தில் 2022-ஆம் ஆண்டின் இறுதியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. அரசின் இந்த முயற்சிக்கு வேறுபாடின்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

துபாய் பயணம் மற்றும் அபுதாபி பயணத்தில் 14 ஒப்பந்தங்கள் மூலம் 6,100 கோடி ரூபாய் தமிழகத்திற்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. மேலும் 12,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். 

ஏராளமான மாவட்டங்களில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கபடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. துபாயிலுள்ள தமிழர்களை சந்தித்து, தமிழகத்திற்கு வந்து தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்துள்ளேன்". என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin say about property tax


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->