#BigBreaking || கொரோனா பரவல் எதிரொலி - தமிழகத்தில் இனி..., சற்றுமுன் தமிழக முதல்வர் பிறப்பித்த கட்டுப்பாடு.! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் சென்னையில் கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுபடுத்த சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. 

இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்ற நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவுறுத்தியுள்ளார். அதன்படி,

* கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

*பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

*கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளை கண்காணிக்க வேண்டும்.

என்று கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் தமிளகத்தில் முகக்கவசம் அணிவது அவசியமாகியுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Say Corona issue face mask must


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->