விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவிற்கு மகத்தான வெற்றியைத் தந்த வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணி 40 தொகுதிகளிலும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்தது. 

இதையடுத்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அன்னியூர் சிவாவை வெற்றி வேட்பாளராக களமிறக்கினோம். மக்களவைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த அதிமுக, இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தோல்வி பயத்தில் பின் வாங்கியது. 

இரவு, பகல் பாராது இடைத்தேர்தல் வெற்றிக்காக உழைத்த திமுக தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சித் தலைவர்களுக்கும், இந்தியா கூட்டணியினருக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும். திமுக அரசின் சாதனைகளுக்குக் கிடைத்த மகுடமாக இந்த இடைத்தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. 

இதன் மூலம் மக்கள் எப்போதும் திமுகவோடு இருக்கிறார்கள் என்பதை பொய் பரப்புரையாளர்களுக்கு உணர்த்தியுள்ளார்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Says About Vikravandi ByElection Victory


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->