கோவில்கள் யாருக்கு சொந்தம் தெரியுமா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். இணையர்களுக்கு தாலி உடன் 30 சீர்வரிசைப் பொருட்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அமைச்சர்களை முதலமைச்சர் வேலை வாங்குவதை பார்த்து இருக்கிறோம், ஆனால் முதல்வரை வேலைவாங்க கூடியவராக அமைச்சர் சேகர் பாபு இருக்கிறார்

அனைவருக்குமான அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அரசியல் செய்ய எதுவும் கிடைக்காததால், சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்.

கோயில் என்பது மக்களுக்குத் தான், தனிப்பட்ட நபரின் சொத்து அல்ல. இதுவரை இல்லாத அளவிற்கு கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மன்னர் ஆட்சி செய்த போதும், மக்களாட்சி நடக்கும் போதும் கோவில் என்பது மக்களுக்கானது. அது தனிப்பட்ட யாருடைய சொத்தும் அல்ல. 

கோவில்களின் சொத்துக்களை திமுக ஆட்சி தான் அதிக அளவில் மீட்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தான் அதிக அளவில் கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கான திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Speech for Hindu Temple Issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->