அடுத்தடுத்த வெடிக்கும் சர்ச்சை! திமுகவினர் மீது பாயும் புகார்கள்! வசமாக சிக்கிய ஆ.ராசா!
Complaint to Delhi Police that ARasa is inciting religious riots
சென்னையில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் "சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரான சமாதானத்தை டெங்கு, கொரோனா, மலேரியா, கொசு போன்ற ஒழிக்க வேண்டும்'' பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உதயநிதிக்கு எதிராக இந்து அமைப்புகளும், பாஜகவினரும், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அவர் மீது சில மாநிலங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சென்னையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் மேடையில் பேசிய அவர் "தம்பி உதயநிதி ஸ்டாலின் கட்சியின் இளைஞர் அணி செயலாளராகவும் அமைச்சராகவும் பொறுப்பேற்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட டெங்கு, மலேரியா போன்று நச்சுக்கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு அதை ஒழிக்க வேண்டும் என பேசியதை கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்.
சனாதான தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் மென்மையாகத்தான் கூறியுள்ளார். மலேரியாவையும் டெங்குவையும் இந்த சமூகம் அருவருப்பாக பார்க்காது. ஆனால் தொழுநோயையும் எச்ஐவியையும் இந்த சமூகம் அவலமாக பார்க்கும், அருவருப்பாக பார்க்கும்.
அவ்வாறு சமூக அவலம் நிறைந்த நோயாகத்தான் சனாதனத்தை பார்க்க வேண்டும்" என பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான வினீத் ஜண்டாள் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மதக் கலவரத்தை தூண்டும் விதமாக ஆ.ராசா பேசியுள்ளதாக அந்த புகாரில் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே இவர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Complaint to Delhi Police that ARasa is inciting religious riots