கர்நாடகா சட்டசபைத் தேர்தல்: இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா சட்டசபைத் தேர்தல்: இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்.!

கர்நாடகா மாநில சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் மாநிலம் தோறும் சென்று மக்கள் ஆதரவளித்த திரட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு கட்சியினரும், தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். முதல் முறையாக காங்கிரஸ் கட்சி சார்பில் 124 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று இரண்டாவது கட்டமாக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் சித்தராமையா போட்டியிட விரும்பிய கோலார் தொகுதி குறித்து எந்த விதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass announce second phase candidates list for karnataga assembly election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->