கர்நாடகா சட்டசபைத் தேர்தல் - இன்று தேர்தல் அறிக்கை வெளியிடும் காங்கிரஸ்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா சட்டசபைத் தேர்தல் - இன்று தேர்தல் அறிக்கை வெளியிடும் காங்கிரஸ்.!

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.  இன்னும் தேர்தலுக்கு 8 நாட்கள் மட்டுமே உள்ளதால் ஆளும் கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்டவற்றின் தேசிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஆறு முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ள நிலையில் ஆளும் பாஜக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. 

அந்த அறிக்கையில், ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள், இலவச பால், ரேஷன் கடைகளில் ஐந்து கிலோ சிறுதானியங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் இன்று தேர்தல் அறிக்கையை  வெளியிட உள்ளது. இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சித்தராமையா, மாநில தலைவர் டிகே சிவக்குமார், தேர்தல் அறிக்கை குழு தலைவர் டாக்டர் பரமேஸ்வராஜி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 

ஏற்கனவே ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் உள்ளிட்ட இலவசங்களை அறிவித்த நிலையில், தற்போது வெளியிடப்பட உள்ள அறிக்கையில் பாஜகவுக்கு எதிராக ஏராளமான இலவச அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass publish election report for karnataga assembly election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->