5 மாநில சட்டமன்ற பொது தேர்தல்.!! காங்கிரஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற பொது தேர்தலும் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் நடப்பாண்டில் நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற பொது தேர்தலுக்கான பார்வையாளர்களை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.

அதன்படி ராஜஸ்தான் மாநில சட்டமன்ற பொது தேர்தலுக்கு மூத்த பார்வையாளராக மதுசூதன் மிஸ்டரியும், கர்நாடக மாநில தேர்தலில் முக்கிய பங்கு வகித்த சசிகாந்த் செந்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மத்திய பிரதேச மாநில சட்டமன்ற பொது தேர்தலுக்கு மூத்த பார்வையாளராக ரஞ்சித் சிங் சுர்ஜிவாலா மற்றும் பார்வையாளராக சந்திரகாந்த் ஹண்டூர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற பொது தேர்தலுக்கு மூத்த பார்வையாளராக பிரீதம் சிங் மற்றும் பார்வையாளராக மீனாட்சி நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று தெலுங்கானா மாநில சட்டமன்ற பொது தேர்தலுக்குமூத்த பார்வையாளராக தீபா தஷ்முன்ஷி மற்றும் பார்வையாளராக ஶ்ரீவெள்ள பிரசாத் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மிசோரம் மாநில சட்டமன்ற பொது தேர்தலுக்கு சச்சின் ராவ் பார்வையாளராக நியமித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress appointed 5 state assembly election observers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->