மகளிர் ஸ்பெஷல்.. இரட்டிப்பு சம்பளம், 50% இட ஒதுக்கீடு.. காங்கிரஸின் 5 வாக்குறுதிகள்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஐந்து வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ள நிலையில் தற்போது மகளிருக்கான காங்கிரஸ் கட்சியின் ஐந்து வாக்குறுதிகளை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அழைத்துள்ளார். 

அதன்படி,

1) ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

2) மத்திய அரசின் புதிய பணி நியமனங்களில் பெண்களுக்கு பாதி உரிமை, அதாவது 50 சதவீதம் இட ஒதுக்கீடு.

3) அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு பணியாளர்களில் மாத சம்பளத்தில் மத்திய அரசின் பங்கு இரட்டிப்பாக்கப்படும்.

4) பெண்களின் உரிமைகளுக்காக ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சட்ட உதவியாளர் நியமிக்கப்படுவர்.

5) நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பணிபுரியும் பெண்களுக்காக விடுதி என தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மகளிர்க்கு ஐந்து உத்தரவாதத்தை காங்கிரஸ் கட்சி வழங்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress election manifesto for woman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->