KPK ஜெயக்குமாரின் மற்றொரு கடிதம்.. சிக்கிய முக்கிய புள்ளிகள்.!!‌‌ அதிரும் நெல்லை .!! - Seithipunal
Seithipunal


நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் எழுதிய மரணமாக்கும் மூலம் என்ற கடிதம் வெளியாகி பல அரசியல் புள்ளிகளுக்கு சிக்கலை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கொல்லப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமாரின் மற்றொரு கடிதம் வெளியாகி பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளது.

அந்த கடிதத்தில் தனது பிரச்சினையை மனதில் வைத்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை யாரும் பழிவாங்க வேண்டாம், சட்டம் தன் கடமையைச் செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மகள் கத்ரீன் திருமணத்தை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் நன்றி என கடிதத்தில் உருக்கமாக ஜெயக்குமார் எழுதியுள்ளதாக தெரிய வருகிறது.

அதேபோன்று தனக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான பணம் தொடர்பாக 14 பேர் கொண்ட பட்டியலையும், தான் திருப்பி அளிக்க வேண்டிய பண விவரங்களையும் ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியனிடம் ரூ.5 லட்சம் கொடுத்துவிட்டு, காசோலையை திரும்பப் பெற வேண்டும். இடிந்தக்கரையை சேர்ந்தவருக்கு ரூ.10 லட்சம் திரும்ப கொடுக்க வேண்டும் என்பதையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.சொத்து ஆவணங்கள் குறித்தும் கடிதத்தில் தன் குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress executive jayakumar 2nd letter released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->