திடீர் திருப்பம் | காங்கிரஸ் தலைவர் தேர்தல் - ஒருவரின் வேட்புமனு நிராகரிப்பு!
Congress leader election candidate list 2022
வரும் அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் நேரு குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர் பதவிக்கு போட்டியிட நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜார்கண்ட் மாநில தலைவர் கே.என்.திரிபாதி, எம்பி சசிதரூர் உள்ளிட்டோர் வெட்டுமான்னு தாக்கல் செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை, தேர்தல் தலைவர் மதுசூதன் மிஸ்திரி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கேஎன் திரிபாதியின் படிவம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில விதிமுறைகளை அவர் பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கையெழுத்து தொடர்பான பிரச்சனைகள் உள்ளதாகவும் காங்கிரஸின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.
தற்போது காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர் என்றும், காங்கிரஸின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவராக மதுசூதன் மிஸ்திரி அறிவித்துள்ளார்.
மேலும், வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கு அக்டோபர் 8 வரை கால அவகாசம் உள்ளதாகவும், அதன் பிறகு யாரும் வாபஸ் பெறாவிட்டால் வாக்குப்பதிவு தொடங்கும் என்றும் மதுசூதன் மிஸ்திரி அறிவித்துள்ளார்.
English Summary
Congress leader election candidate list 2022