#BREAKING | காங்கிரஸ் தலைவருக்கான போட்டியிலிருந்து முக்கிய புள்ளி விலகல்? ஜி-23 வாஷ்-அவுட்?! பரபரப்பு தகவல்!
Congress leader election Digvijaya Singh press meet
காங்கிரஸ் தலைவருக்கான போட்டியிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் பின்வாங்கியிருப்பது திருப்பமாக அமைந்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த திக்விஜய சிங் தெரிவித்ததாவது, "கார்கே ஜி என்னுடைய மூத்தவர். நான் அவரது இல்லத்திற்குச் சென்று அவரிடம், 'காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்தால் நான் வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டேன்' என்று கூறினேன்.
மேலும், நான் அவருக்கு ஆதரவாக நிற்கிறேன் என்றும் அவருக்கு எதிராக போட்டியிடுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் கூறினேன். அவரை முன்மொழிபவராக நான் இருப்பேன். அதன்பிறகு, அவர் வேட்பாளர் என்பதை பத்திரிகைகள் மூலம் அறிந்தேன்.
எனது வாழ்நாள் முழுவதும் காங்கிரசுக்காக உழைத்துள்ளேன், தொடர்ந்து செய்வேன். தலித், பழங்குடியினர் மற்றும் ஏழைகளுக்காக நிற்பது, மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்களுக்கு எதிராகப் போராடுவேன்.
காங்கிரஸ் மற்றும் நேரு-காந்தி குடும்பத்திற்கான எனது அர்ப்பணிப்பு உள்ளிட்ட 3 விஷயங்களில் நான் சமரசம் செய்து கொள்ளவில்லை" என்று திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கேவை நான் முன்மொழிகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி அறிவித்துள்ளார்.
மேலும் ஒரு பரபரப்பு தகவலாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காங்கிரஸின் ஜி-23-ல் இருந்து எந்தத் தலைவரும் வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
English Summary
Congress leader election Digvijaya Singh press meet