#BigBreaking | காங்கிரஸ் தலைவர் தேர்தல் : அடுத்தடுத்து மூன்று பேர் மனுதாக்கல்! அந்த மூன்றாவது நபர்., செம்ம டிவிஸ்ட்! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் தலைவர் தேர்தல் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர், மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் கே.என்.திரிபாதி ஆகியோர் அடுத்தடுத்து மனுதாக்கல் செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்க நிலையில், இன்று மூன்று பேர் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்துள்ளனர்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முதலாவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

அவரை தொடர்ந்து கட்சியின் தலைவர் பதவிக்கு ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் கே.என்.திரிபாதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கேவும் மனுதாக்கல் செய்துள்ளார். 

இதில் யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென தலைவர் பதவிக்கு ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் கே.என்.திரிபாதி வேட்புமனு தாக்கல் செய்து இருப்பது கட்சியினர் மத்தியில் பரபரப்பை உண்டாக்கியது. 

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். கட்சித் தலைவர்களின் முடிவுக்கு மதிப்பளிக்கப்படும்" என்று கே.என்.திரிபாதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவருக்கான போட்டியிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் பின்வாங்கியிருப்பது திருப்பமாக அமைந்தது. "கார்கே ஜி என்னுடைய மூத்தவர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால், நான் வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டேன்" என்று திக்விஜய சிங்  விளக்கமளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress leader election sep nomination


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->