#Breaking : காங்கிரஸ் கட்சி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே வெற்றி.! இத்தனை வாக்குகள் வித்தியாசமா.?! - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் சோனியா காந்தி குடும்பத்தினர் யாரும் போட்டியிடவில்லை. இந்த தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இருவரும் போட்டியிட்டனர். 

அதன்படி, நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மொத்தம் 9,915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9500க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். 

இதனையடுத்து வாக்கு பெட்டிகள் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்துக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இதில் வாக்கு பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.அதன் படி, மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகளும், சசிதரூர் 1,072 வாக்குகளும் பெற்றுள்ளனர். எனவே, காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றுள்ளார். இதில் 416 வாக்குகள் மதிப்பிழந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leader election Mallikarjuna Kharge get victory 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->