ராகுல், சோனியாவை ஆட்டம் காண வைத்த அறிவிப்பு.! கடவுளே.. தொடர்ந்து இப்படியா?!  - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில் தனது பதவியை ராஜிநாமா செய்து இருப்பது, அக்கட்சியின் தலைமை சோனியா, ராகுலை அதிரவைத்துள்ளது.

ஒரு வழக்குரைஞராகவும், இளம் அரசியல்வாதியாகவும் வலம்வந்த ஷெர்கில் (பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்), காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.

இந்நிலையில் இவர் தனது கட்சி பதவியை ராஜிநாமா செய்து இருப்பது, கட்சித் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ஷெர்கில் அனுப்பியுள்ள அந்த ராஜிநாமா கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, "காங்கிரஸ் கட்சியின் தற்போதைய முடிவெடுப்பவர்களின் சித்தாந்தமும், பார்வையும் இனி இளைய சமுதாயத்திலும், நவீன இந்தியாவின் எண்ணங்களுடனும் ஒத்துபோவாமல் இருப்பதே  முதன்மையான காரணம்

இனி முடிவெடுப்பது பொதுமக்கள் மற்றும் நாட்டின் நலனுக்கானது இல்லை என்று சொல்வது எனக்கு வேதனை தருகிறது. உண்மை நிதர்சனத்தைத் தொடர்ந்து புறக்கணிப்பதும், தனி ஒருவரின் சுயநலன்களால் பாதிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி பணியாற்ற முடியாது" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leader Javeer Shergill resigned


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->