நான் உன்னை காதலிக்கிறேன் என்று யார் முதலில் சொல்வார்கள்?.. எதிர்க்கட்சிகள் ஒற்றுமை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஏப்ரல் மாதத்தில் இந்திய நாட்டின் 17 வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில், பாஜக பெரும்பான்மையை பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவில் மோசமான தோல்வியை தழுவியது. 

இந்நிலையில், அடுத்ததாக வரும் 2024-ல் 18 ஆவது மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இந்தியாவின் பல்வேறு மாநில அரசியல் கட்சிகளும் இப்போதே கூட்டணி கணக்குகள் குறித்து ஆலோசிட்டு வருகின்றன.

இத்தகைய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய பீகார் முதல்வர் நிதீஷ் குமார் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அவர் பேசிய போது, "அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கூறுகின்ற பரிந்துரையை உடனடியாக காங்கிரஸ் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முடிவெடுத்தால் தான் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியும். நாம் ஒன்றிணைந்தால் 100 இடங்களுக்குள் பாஜகவை முடக்கி விடலாம். இல்லையென்றால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே வெளிச்சம். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதில் தாமதம் ஏற்படக் கூடாது." என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் பேசுகையில், நீங்கள் விரும்புவதையே காங்கிரஸூம் விரும்புகிறது. காதலிலும் சில சமயம் பிரச்சினை வரும், நான் உன்னை காதலிக்கிறேன் என்று யார் முதலில் சொல்வார்கள்? என்று. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை விரைவில் ஏற்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leader Salman khurshid speech about nithish Kumar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->