இயற்கை பேரிடர் வரும் முன்பே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவர் தான் கடவுளின் அவதாரமா? - ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் தாக்கு..!! - Seithipunal
Seithipunal



தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "பிரதமர் மோடியின் ஆட்சி தனிப் பெரும்பான்மை பெற்ற ஆட்சியல்ல. கூட்டணியின் தயவில் தான் அவர்கள் ஆட்சி அமைத்துள்ளனர். ஆனால் அதை மறந்து பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் வரம்பு மீறி பேசுகிறார்கள். 

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியைப் பார்த்து சாதி குறித்துப் பேச ஒரு மத்திய அமைச்சருக்கு சொல்லிக் கொடுத்தது யார்? இவ்வளவு மட்டமான, அவதூறான பேச்சை பிரதமர் மோடி தான் தூண்டி விடுகிறார். ஆனால் ராகுல் காந்தி இதற்கு எதிர் வினையாற்றாமல் பெருந்தன்மையாக, கண்ணியமாகப் பேசினார். 

இப்படியே தொடர்ந்தால் நிச்சயம் நாட்டு மக்கள் மோடியை துரத்தி விடுவார்கள். தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளும் பிரதமர் மோடி, வயநாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடருக்கு, முன்பேயே ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை?

ராமர் கோவில் மீது செலுத்திய கவனத்தை இந்த மாதிரி மலை பிரதேசங்கள் மீது செலுத்தி இருந்தால் இயற்கை பேரிடர்கள் தவிர்க்கப் பட்டிருக்கலாம். ஆனால் பிரதமர் வயநாடு பேரிடருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இதற்கும் ராகுல் காந்தி தான் காரணம் என்று சொல்லிக் கொண்டுள்ளார். 

வயநாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பேரிடரில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவது எப்படி என்று பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கற்றுக் கொள்ளவேண்டும்" என்று பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress MLA EVKS Elangovan Hits PM Modi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->