#BigBreaking | திடீர் திருப்பம் : காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் தப்பித்தார் - சற்றுமுன் அதிரடி அறிவிப்பு!
Congress MLA rupy Manogaran issue
கடந்த வாரம் சென்னை காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கே.ஆர்.ராமசாமி தலைமையில் குழு ஒன்றை அமைத்து காங்கிரஸ் கட்சி விசாரணை நடத்திவந்த நிலையில், இன்று மதியம் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை காங்கிரஸ் கட்சியில் இருந்து தாற்காலிகமாக நீக்கி அறிவிப்பு வெளியாகியது.
தன் மீதான நடவடிக்கை வேதனை அளிப்பதாக ரூபி மனோகரன் தெரிவித்து இருந்தார். இதுகுறித்த அவரின் பேட்டியில், "நடவடிக்கை குழு எடுத்த முடிவு சரியானதா தவறானதா என்பதை கட்சியின் தலைமை முடிவெடுக்கும். ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு கண்டிப்பாக விளக்கமளிப்பேன்.
கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறேன். அகில இந்திய தலைமை சரியான முடிவை சொல்லும் என நம்புகிறேன். கட்சியிலிருந்து நீக்கியது வேதனை அளிக்கிறது. கட்சியை வளர்க்க வேண்டும் என்ற என் ஆசையில் மண் அள்ளி போட்டுவிட்டார்கள்" என்று ரூபி மனோகரன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ரூபி மனோகரன் இடைநீக்கம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
English Summary
Congress MLA rupy Manogaran issue