திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விஜய்யை இணைக்கத் தயார் - காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் கடந்த ஜூன் 16ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்போது விழாவில் பேசிய நடிகர் விஜய், நாளைய வாக்காளர்கள் நீங்கள் தான். அடுத்தடுத்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க போகிறீர்கள். நம் விரலை வைத்து நமது கண்ணையே குத்திக் கொள்வதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அதுதான் இப்பொழுது நிகழ்ந்து வருகிறது. ஒரு ஒட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்றால் ஒருவர் 15 கோடி செலவு செய்தால் அதற்கு முன் அவர்கள் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள் என்று சித்தித்து பாருங்கள் என தெரிவித்திருந்தார்.

நடிகர் விஜயின் இந்த பேச்சையும் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் அவர் விரைவில் அரசியலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் இதுவரை அரசியல் குறித்து வெளிப்படையாக எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நடிகர் விஜயின் என்ற பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மற்றும் நடிகர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் விஜய் அரசியலுக்கு வந்தால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைக்க தயார் என தெரிவித்துள்ளார்.


அந்த வகையில் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் நேற்றைய தினம் நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் நாகர்கோவிலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் அங்கு பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், நடிகர் விஜய் இப்போதுதான் முதல் கூட்டத்தை நடத்தியுள்ளார். அவருக்கு ஏற்கனவே அரசியலில் ஆர்வம் இருந்தது. அதை இப்போதுதான் அவர் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார். வரும் நாட்களில் பொறுத்து இருந்து பார்ப்போம்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நடிகர் விஜய்யை இணைக்க தயாராக இருக்கிறோம். ஆனால் கூட்டணி குறித்த முடிவு எல்லாம் டெல்லி தலைமை தான் முடிவு செய்யும். தமிழகத்தில் கலைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருவது எல்லாம் சாதாரணம் தான். பல தலைவர்கள் கலைத்துறையில் இருந்து வந்து அரசியலில் சாதித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress MP Vijay vasanth speech about Vijay honour students function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->