நெருங்கும் மக்களவை தேர்தல்: நாளை வெளியாகுமா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் தேர்தலுக்கான அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதற்காக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஒரு குழு அமைத்துள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை காலை 11:30 மணியளவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட உள்ளனர். 

இதற்கிடையே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கான முக்கிய வாக்குறுதிகள் மற்றும் இலவச திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Party Election Manifesto issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->