#BREAKING || நம்பிக்கை இல்லா தீர்மான விவாதம்.. காங்கிரஸ் எழுப்பிய 3 கேள்விகள்.!! அனல் பறக்கும் நாடாளுமன்றம்.!! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய பாஜக அரசின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதன் மீதான விவாதம் தற்பொழுது மக்களவையில் தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது அடுத்த மூன்று நாட்களுக்கு நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி இருந்த நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்திற்காக மக்களவை மீண்டும் கூட்டப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கவுரவ் கோகாய் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசி வருகிறார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பாஜக அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில் தற்போது விவாதத்தினை தொடங்கி வைத்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் தனது கருத்தினை முன் வைத்ததற்கு பிறகு அதற்கு பாஜக தரப்பில் முதல் பேச்சாளராக நிஷிகாந்த் துபே பதில் அளிப்பார். அதனைத் தொடர்ந்து இன்று 6 மணி நேரமும், நாளை 6 மணி நேரமும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் எம்பி விவாதத்தை தொடங்கியதும் பிரதமர் நரேந்திர மோடி ஏன் மணிபூருக்கு செல்லவில்லை?, மணிப்பூர் விவகாரம் குறித்து ஏன் இவ்வளவு நாள் பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை?, மணிப்பூர் கலவரம் குறித்து வெறும் 30 வினாடிகள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி பேசி உள்ளார். மணிப்பூர் முதலமைச்சரை ஏன் மத்திய அரசு காப்பாற்றி வருகிறது? என காங்கிரஸ் கட்சி சார்பில் கவுரவ் கோகாய் 3 கேள்வி எழுப்பி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் கேள்விக்கு பாஜக பதிலளிக்கும் போது நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress party has raised 3 questions in no confidence motion


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->