தெலுங்கானா: மத்திய நிதியமைச்சரின் காரை வழிமறித்த காங்கிரஸார்! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலம் காமரெட்டியில், காங்கிரஸ் கட்சியினர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் காரை வழிமறித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தனது ஸகீராபாத் தொகுதிக்கு உள்பட்ட தெலங்கானா மாநிலம் காமரெட்டி பகுதிக்கு ஆய்வுக்காக சென்றார்.

அப்போது அங்கு திடீரென காங்கிரஸ் கட்சியினர் வந்து அவரது காரை வழிமறித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனை தொடர்ந்து, அங்கு பாஜகவினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், பாஜகவினர் நிர்மலா சீதாராமன் காருக்கு முன்பாக நின்று அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

இதன் பின்னர், காவல்துறையினர் கூட்டத்தை கலைத்து அமைச்சர் செல்லும் பாதையை ஒழுங்குபடுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress party intercepted Nirmala Sitharaman's car


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->