ஆளுநரின் தேநீர் விருந்து.!! திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் புறக்கணிக்கிறது.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாளை 76 வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் ரவி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ரவி சார்பில் சுதந்திர தின விழா தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனை புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும், அதன் உச்சமாக தமிழ்நாடு மாணவர்களை பெற்றோர்களை அவர்களது எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாக கண்டித்து நாளை நடைபெறும் தேநீர் விருந்து புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை நடைபெறும் மாநிலமாளிகையின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "நமது நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி நாளை தமிழ்நாடு ஆளுநர் ஆர் எம் ரவி அவர்கள் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணிக்கிறோம்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடவும், செயல்படவும் முனைகிறார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒருமனதாக இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட பல்கலைக்கழக சட்டம் மசோதா உள்ளிட்ட தமிழ்நாடு மக்கள் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் இயற்றப்பட்ட பல முக்கிய சட்ட மசோதாக்களுக்கு வேண்டுமென்றே காலதாமதம் செய்து அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இவற்றையெல்லாம் கண்டிக்கும் விதமாக நாளை அவர் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கிறோம்" என காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress party is also ignoring Governor Tea Party


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->