ராகுல்காந்தி ஒரு தேசத்துரோகி - காங்கிரசை பதறவிட்ட எச்.ராஜா! போராட்டத்தை அறிவித்த செல்வப்பெருந்தகை! - Seithipunal
Seithipunal


தனியார் தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பா.ஜ.க.வின் தற்காலிக பொறுப்பாளர் எச்.ராஜா, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் நிகழ்த்திய சந்திப்பை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார்.

மேலும், இந்த சந்திப்பு குறித்து பேசும் போது, தலைவர் ராகுல்காந்தியை தேசத்துரோகி என்று எச்.ராஜா குற்றம் சாட்டி பேசியது காங்கிரஸ் கட்சியினரை கடும் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளது.

இந்நிலையில், எச்.ராஜாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழகம் முழுவதும் நாளை (17.09.2024) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரியின் அந்த அறிவிப்பில், "அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பை எச். ராஜா கொச்சைப்படுத்தி பேசுவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமாக கருத்துகளை கூறுவது வகுப்புவாத விஷமத்தனமான கருத்துகளை பரப்புவது, மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் எச். ராஜாவின் பேச்சை கண்டித்து அனைத்து மாவட்ட தலை நகரங்களில் மாவட்டத் தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமும், ஒப்பற்ற தலைவருமான ராகுல் காந்தியை இழித்து பேசுவதை எவரும் அனுமதிக்க முடியாது. இத்தகைய அநாகரீகமான வகையில் பேசியிருக்கிற எச். ராஜாவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில் தமிழகம் முழுவதும் நாளை (17.09.2024) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Selvaperunthagai BJP H Raja


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->