"தன் இமேஜ்ய் காப்பாற்றி கொள்ள உச்சி மாநாட்டிற்கு ஓடுகிறார்" - மோடியை விளாசிய காங்கிரஸ் !!
congress slams modi for saving his international image
மூன்றாவது முறையாக பதவி ஏற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு இத்தாலியில் நடைபெறும் மாநாட்டிற்கு செல்கிறார். இதைப்பற்றி இந்த ஆண்டு G7 உச்சிமாநாட்டில் "மங்கியுள்ள தனது சர்வதேச இமேஜைக் காப்பாற்ற இத்தாலிக்குச் செல்கிறார்" என்று காங்கிரஸ் மோடியை விளாசியது.
இதை பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களின் ஜி7 மாநாடு 1970களின் பிற்பகுதியில் இருந்து நடைபெற்று வருகிறது. 1997 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில், இந்த மாநாட்டில் ரஷ்யாவும் ஒரு உறுப்பினராக இருந்தது.
2003 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளும் ஜி7 உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளன என்று ரமேஷ் கூறினார்.
இந்திய மக்கள் இடையே G7 உச்சி மாநாடு மிகவும் பிரபலமானது, ஏனென்றால் கடந்த ஜூன் 2007ஆம் ஆண்டில் ஜெர்மனியில் உள்ள ஹெலிஜென்டாமில் இந்த மாநாடு நடந்தது, அந்த மாநாட்டின் பேச்சுவார்த்தைகளில் உலகளாவிய சமநிலையான காலநிலை மாற்றதாய் உறுதி செய்வதற்கான பிரபலமான சிங்-மெர்க்கல் பார்முலா முதலில் உலகிற்கு வழங்கப்பட்டது, என்றார்.
"இது இன்னும் பேசப்படுகிறது. Dr. மன்மோகன் சிங்கும் ஜெர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கலும் சரித்திரம் படைத்தனர். Dr. மன்மோகன் சிங் உலகளாவிய குரலாக உருவெடுத்தது பொருளின் மூலம் தான் அன்றி வெற்றுப் பெருமைகளால் அல்ல" என்று ரமேஷ் கூறினார்.
"இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் குறைந்துவிட்ட சர்வதேச இமேஜைக் காப்பாற்ற இன்று இத்தாலிக்கு பறக்கும் எங்கள் 'மூன்றில் ஒரு பங்கு' பிரதான் மந்திரி இந்த வரலாற்றை அறிந்து கொள்வார் அல்லது ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்ப்பது மிகவும் அதிகம்" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ் கூறினார்.
ஜூன் 13ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதிவரை இத்தாலியின் அபுலியா பகுதியில் உள்ள போர்கோ எக்னாசியாவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் G7 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது, இந்த மாநாட்டில் உக்ரைனில் நிலவும் போர் மற்றும் காசாவில் மோதல்களால் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
congress slams modi for saving his international image