சிக்கலில் கார்த்திக் சிதம்பரம்! சொந்த கட்சியிலேயே கும்மாங்குத்து! 100 பேரை அழைத்து வந்து சம்பவம் செய்த புள்ளி!
Congress vs DMK Karthik Chidambaram
திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், கூட்டணியில் இருந்தாலும் தேர்தல் சமயத்தில் திமுகவை எதிர்த்து சில கருத்துக்களை தெரிவிப்பது வழக்கமாகி வருகிறது.
குறிப்பாக தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக முன்பும், தற்போதும் இருக்கும் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் திமுகவை எதிர்க்கும் வகையில் பேசிவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும் போது, திமுகவோடு காங்கிரஸ் வலுவான கூட்டணியில் இருப்பதாக தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
ஆனால், கார்த்திக் சிதம்பரம், திமுகவுக்கு எதிரான கருத்துக்களை அடிக்கடி தெரிவித்து வருவதை வாடிக்கையாக கொண்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால் காங்கிரசுக்கு எதிராகவே அவரின் சில கருத்துக்கள் இருக்கும்.
இப்படி அண்மையில், கூட்டணியில் இருப்பதால் நாம் கூனி குறுக வேண்டாம். தவறு நடப்பதை சுட்டிக்காட்ட வேண்டும். காங்கிரசுக்கு என்று தனி பலம் உள்ளது என்று பேசியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, மறைமுகமாக கார்த்திக் சிதம்பரத்துக்கு சில அறிவுரைகளை வழங்கி இருந்தார்.
அதில், எதை எப்போது பேச வேண்டும் என்ற ஒரு கணக்கு உள்ளது. அதை அப்போது தான் பேச வேண்டும். அந்த பேச்சுக்கு மட்டும் தான் மரியாதை இருக்கும். பேசுகின்ற சபை அறிந்து, காலம் அறிந்து, கட்சியின் தலைமையை கலந்து ஆலோசித்து சில கருத்துக்களை பேச வேண்டும். நம்மை பார்த்து பிறர் ஏளனம் செய்யும்படி, எதையும் நாம் பேசக்கூடாது" என்று கேஸ் அழகிரி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் , கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சத்தியமூர்த்தி பவன் முன்பு 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை நேரில் சந்தித்த சட்டமன்ற காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கே.ஆர்.ராமசாமி, புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளனர்.
English Summary
Congress vs DMK Karthik Chidambaram