அடுத்த டிவிஸ்ட்... காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு... திமுகவின் நிலைப்பாடு என்ன..?
Congress will not participate in Governor ravi tea party
குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. அதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியும் ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் "இந்திய குடியரசு தினத்தையொட்டி நாளை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கிறோம். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை வேண்டுமென்றே காலதாமதம் செய்து அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
மக்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் ரம்மி தடை சட்டம், நீட் விலக்கு, பல்கலைக்கழக சட்டங்கள் என 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. கடந்த ஜனவரி 23ஆம் தேதி ஆளுநர் மாலையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழாவின் பொழுது இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என பேசி இருக்கிறார்.
தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸின் முகமாக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு, தமிழகம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து வட்டார் என்று நினைத்திருந்த நிலையில் மீண்டும் சர்ச்சை பேச்சுக்கள் பேசி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை செயல்படாவிட்டால் தடுக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும் தமிழக அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட நினைக்கும் பாசிச பாஜக ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரின் செயலுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக அறிவித்து வரும் நிலையில் திமுக தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருக்கிறது. இது குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தேநீர் விருந்து குறித்து தலைவர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் திமுகவின் நிலைப்பாட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன.
English Summary
Congress will not participate in Governor ravi tea party