கர்நாடகாவில் காங்கிரஸ் நிச்சயம் வெல்லும் - டி. கே. சிவக்குமார் ! - Seithipunal
Seithipunal



இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் கர்நாடகாவில் காங்கிரஸ் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கணிப்புகள் கூறின. இதுகுறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவக்குமார் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அதில் அவர் கூறியதாவது, "கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போதும் காங்கிரஸ் கட்சி 85 இடங்களில் தான் வெல்லும் என்று கூறப்பட்டது. ஆனால் எனது கணிப்புப்படி நாங்கள் அப்போது 135 இடங்களில் வென்றோம். அதே போல் தான் இப்போதும் நாங்கள் நிச்சயம் வெல்வோம் என்று நான் நம்புகிறேன்.

எனது கணிப்பு சரியென்றால், கர்நாடாவில் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக மொத்தமுள்ள தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் வென்று இந்த கருத்துக்கணிப்புகள் போலியானவை என்று நிரூபிக்கும்" என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவக்குமார் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Will Surely Win in Karnataka T K SivaKumar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->