தொகுதி பங்கீடு: தி.மு.க-காங்கிரஸ் இடையே இன்று ஒப்பந்தம்.!
Constituency sharing DMK Congress today
மக்களவைத் தேர்தல் தொடர்பான தொகுதி பங்கீடு தி.மு.க-காங்கிரஸ் இடையே இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு தி.மு.க- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இதனால் காங்கிரஸ் மூத்த நிர்வாகி கே. சி. வேணுகோபால் உள்ளிட்டோர் டெல்லியில் இருந்து சென்னை வருகின்றனர். முன்னதாக தி.மு.க- -காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.
தொகுதி பங்கீடு இன்று கையெழுத்தாக உள்ள நிலையில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Constituency sharing DMK Congress today