தொகுதி பங்கீடு: திமுக-மதிமுக பேச்சு வார்த்தை!
Constituency sharing DMKM DMK talks
வருகின்ற மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து போட்டியிடக்கூடிய மதிமுக கட்சி குழு, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ளது.
மதிமுக சார்பில் ஆடிட்டர் அர்ஜுன மூர்த்தி, அரசியல் ஆய்வு மையச் செயலாளர், தேர்தல் பணி செயலாளர் உள்பட 4 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளது.
திமுகவை பொருத்தவரை டி.ஆர். பாலு தலைமையில் தொகுதி பங்கீடு குழு செயல்படுகிறது. மதிமுக கடந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டது.
அதேபோல் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டது. இந்த முறை இரண்டு தொகுதிகள் வேண்டும் என மதிமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி, காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 தொகுதிகளை விருப்ப பட்டியலாக மதிமுக தெரிவித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
முதல் கட்ட பேச்சு வார்த்தையில் மதிமுக விருப்பப்பட்டியலை திமுக அதன் தலைமையிடம் கலந்து ஆலோசிக்கும். இதனை அடுத்து இரண்டு குழுவும் தங்களது தலைமையுடன் ஆலோசனை நடத்தி இறுதி கட்ட முடிவை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Constituency sharing DMKM DMK talks