மனைவிக்கு கொரோனா தொற்று.. வீட்டில் தனிமைப்படுத்தப்படுத்தி கொண்ட எடப்பாடி பழனிச்சாமி.! - Seithipunal
Seithipunal


மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி தனிமைப்படுத்தி கொண்டார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராதா கிரீன்வேஸ் சாலை இல்லத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதன்காரணமாக, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். மனைவிக்கு கொரோனா உறுதியான நிலையில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் ஆதரவாளர்கள், தொண்டர்கள் நலன் கருதி தனது வீட்டில் எந்த ஆலோசனை கூட்டத்தையும் அவர் கூட்டவில்லை. ஏற்கனவே திட்டமிட்டிருந்த முக்கிய நபர்களின் சந்திப்புகளையும் அவர் தவிர்த்துவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona infection in wife Edappadi Palanichamy isolated at home


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->