கட்சியின் தலைவருக்கே கொரோனா., கதிகலங்கி நிற்கும் தொண்டர்கள்.!
Coronavirus Akhilesh Yadav
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான, சமாஜ்வாதி கட்சியின் தலைவரான முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரின் மனைவி டிம்பிள் யாதவ், மகள் டீனாவிற்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர். மேலும் அவர்களுக்கு சிகிசையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே என்னால் பொது நிகழ்ச்சிகளில் தற்போது கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என்று அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் இந்த நிலையில், கட்சியின் தலைவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது, அக்கட்சியின் தொண்டர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் அவர் விரைவில் குணமடைந்து தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தொண்டர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர்.
English Summary
Coronavirus Akhilesh Yadav