அமர் பிரசாத் ரெட்டிக்கு போலீஸ் காவல்! ஆலந்தூர் நீதிமன்றம் அனுமதி!! - Seithipunal
Seithipunal


சென்னை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அமைந்துள்ள பகுதியில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் பாஜக கொடி கம்பம் சுமார் 50 அடி உயரத்தில் நிறுவப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்களும், இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்ததை எடுத்து போலீசார் அடுத்து விசாரணையில் அந்த கொடிக்கம்பம் அமைக்க அனுமதி தரப்படாததால் அதனை அகற்ற முயற்சி செய்தனர்.

அப்போது தமிழக பாஜக நிர்வாகிகளுக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட முதலில் கொடிக்கம்பம் அகற்றக் கொண்டுவரப்பட்ட ஜே.சி.பி இயந்திரத்தை பாஜகவினர் அடித்த நொறுக்கினர். இது தொடர்பாக பாஜகவினர் 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் பாஜகவைச் சேர்ந்த 6 முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

அதன்படி தமிழக பாஜக விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே இருந்த இரண்டு புகார்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மீண்டும் கைது செய்தனர். இந்த நிலையில் பாஜக கொடி கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ஆலந்தூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி சந்திர பிரியா அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்த போது பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இது பொய்யான வழக்கு என்று வாதத்தை முன் வைத்ததை அடுத்து போலீஸ் தரப்பில் ஆஜாலான வழக்கறிஞர் இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரிடமும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் போலீஸ் காவல் வழங்க வேண்டும் என தனது வாதத்தினை முன் வைத்தார்.

 அப்போது பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமர் பிரசாத் ரெட்டிக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும், ரத்த கொதிப்பு இருப்பதாகவும் தெரிவித்ததோடு அவருக்கு உரிய மருந்து மாத்திரைகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி சந்திர பிரியா அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பாஜகவினருக்கு ஒரு நாள் போலீஸ்காரர்கள் வழங்கி உத்தரவிட்டு வழக்கில் விசாரணையை ஒத்தி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court order one day police custody to Amar Prasanth Reddy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->